ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது எடுத்து 2 லட்சம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதிலொன்று ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதை எடுத்து தமிழகத்தில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட திட்டம் அமலுக்கு வந்தது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஆவின் பாலகத்தில் வாடிக்கையாளர்கள் 2 லட்சம் பேர் அதிகரித்து உள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் பாலை விட ஆவின் பால் 7 ரூபாய் விலை வித்தியாசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மாதாந்திர அட்டை பயன்படுத்துபவர்களுக்கு மேலும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.