Categories
மாநில செய்திகள்

“அவங்க வேணும்னே பண்றாங்க”… இலங்கை அரசு மீது மீனவர்கள் குற்றச்சாட்டு…!!

இலங்கை அரசானது அடிக்கடி தமிழக மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்க வருவதாக போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றன. சிலசமயம் படகில் உள்ள மீனவர்களை கைது செய்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது புதிதாக இலங்கை அரசால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பழைய பஸ்களில் சிக்கி ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்து விடுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை அரசிடம் இதுகுறித்து கேட்டபோது மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு பழைய பேருந்துகளை, விபத்தில் சிக்கி நாசமான பேருந்துகளை கடலில் இறங்குவதாக அவர்கள் காரணம் கூறுகின்றனர். ஆனால் தமிழ்நாடு மீனவர்கள், தங்களின் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்த வேண்டும்  என்பதற்காகவே இலங்கை அரசு இவ்வாறு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories

Tech |