சிறிய ரக விமானம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் ஒரேப்ரோ நகரத்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. அந்த விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு விமானி மற்றும் 8 ஸ்கை டைவிங் வீரர்கள் பயணித்துள்ளனர். இதனையடுத்து அந்த விமானம் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த ஒன்பது பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.