சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான கானா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் மூன்றாவதாக ‘வாழ்’ படத்தை தயாரித்துள்ளார்.
Here is our @SKProdOffl ‘s #Vaazhl
trailer – https://t.co/t5s1EGb6cxHope you all will like it #VaazhlOnSonyLIV from July 16 😊👍@SonyLIV @thambiprabu89 @KalaiArasu_ @TheDhaadiBoy @pradeep_1123 @DhawanDiva @raymondcrasta @kabilanchelliah @dhilipaction @SonyMusicSouth
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 9, 2021
இந்த படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரதீப், பானு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஜூலை 16-ஆம் தேதி சோனி லீவ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வாழ் படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.