ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது ஹிப் ஹாப் ஆதி சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் .
Second single #BahubalikuOruKattappa dropping on July 12!
பாகுபலிக்கு ஒரு கட்டப்பா
அத போல தான் என் சித்தப்பா !Tag that Kattappa in your life 😃@TGThyagarajan presents, a @SathyaJyothi_ and #IndieRebels production, #SivakumarinSabatham
Music on @thinkmusicindia pic.twitter.com/TqXV2MHCQB
— Hiphop Tamizha (@hiphoptamizha) July 9, 2021
மாதுரி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 12-ஆம் தேதி ‘பாகுபலிக்கு ஒரு கட்டப்பா’ என்கிற பாடல் வெளியாக உள்ளது.