Categories
தேசிய செய்திகள்

“இந்தி மொழியால் தான் இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும்”… சர்ச்சையில் சிக்கிய அமித்ஷா..!!

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது .இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

Image result for Home Minister Amit Shah has posted that only Hindi can integrate India

ஏற்கனவே மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்  அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பலரும் சமூக வலைத்தங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |