Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி முகாம் நாளை ரத்து…. சென்னை மக்களுக்கு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படாது. எனவே மக்கள் யாரும் வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |