குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் திரையரங்குக்கு செல்லலாம் என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அதன்படி பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து கொண்டு வந்தது. இதனால் அம்மாநில முதல்வர் அம்ரித் சிங் தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வந்தார்.
மேலும் அம்மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. திங்கட்கிழமை முதல் அம்மாநிலத்தில் திரையரங்கு, வணிக வளாகம், பார் போன்ற அனைத்தும் திறக்க உள்ளது. குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் திரையரங்குகள் வணிக வளாகங்களுக்கு செல்லலாம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.