Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இவங்க உண்மையானவர்கள் இல்லையா… அதிர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர்… காவல்துறையினரின் செயல்…!!

காவல்துறையினர் போல் போலி வேடம் அணிந்து ரியல் எஸ்டேட் அதிபரை கடத்த முயற்சி செய்த 4 பேரை கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான ரியாத் அலி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் இவரின் வீட்டுக்கு வந்த நபர்கள் குற்றப்பிரிவு காவல்துறையினர் எனவும், தங்களை விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் தன்னை அழைத்து செல்பவர்கள் காவல்துறையினர் தான் என்று நம்பி அவருடன் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து பூந்தமல்லி சாலை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த இந்தக் காரை மடக்கி சோதனை செய்த போது காருக்குள் இருந்தவர்கள் காவல்துறையினர் என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் ஏற்பட்ட காவல்துறையினர் அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் காரின் உள்ளே இருந்த ரியாத் அலி அலரியுள்ளார். அதன் பின் காவல்துறையினர் அவரிடம் விசாரித்த போது அவரை காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் அவர்கள் கரூரில் வசிக்கும் சரவணன், தர்மராஜ், ராஜா, சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.

இதில் தர்மராஜ் என்பவருக்கும், ரியாத் அலிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து தகராறு இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் தான் ஆட்களை வைத்து ரியாத் அலியை கடத்திருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த கார் மற்றும் கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |