Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்….! தாமதம் ஏற்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! எதையும் யோசித்து செய்ய வேண்டும்.

இன்று எதிலும் பொறுமையுடன் யோசித்து செயல்பட வேண்டும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தை நல்லவிதமாக நடத்துவீர்கள். பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிடும். இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பெற்றோர்களிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும். அப்போதுதான் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு காரியத்தில் ஈடுபடும் முன்பு அதனை யோசித்து செய்ய வேண்டும். காதல் பிரச்சினையை கொடுத்தாலும் இறுதியில் சந்தோஷத்தை கொடுக்கும். காதலின் நிலைபாடுகள் உங்களுக்கு சில மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். கல்வி பற்றிய அக்கறை இருக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக  உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை; வடக்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |