Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! செலவுகள் ஏற்படும்….! நேர்மையான எண்ணங்கள் இருக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! அனைவரிடமும் நியாயமாக நடந்து கொள்வீர்கள்.

இன்று எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு இருக்கின்றது. உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். நல்லது எது கெட்டது எது என ஆராய்ந்து முடிவுகள் எடுப்பீர்கள். அனைவரிடமும் நியாயமாக நடந்து கொள்வீர்கள். நேர்மையான எண்ணங்களும் இன்று பிரதி பலிக்கும். சிலருக்கு புத்தாடை வாங்கக் கூடிய வாய்ப்புகளும் ஆடை ஆபரணங்கள் சேரக் கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றது. அதிகளவு செலவுகள் ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். அரசாங்க வழியில் அனைத்தும் நல்லபடியாக முடியும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். வருமானம் வருகிறது என்பதற்காக தேவையில்லாத பொருட்கள் மீது முதலீடுகள் செய்ய வேண்டாம்.

சில காரியங்களில் வெற்றி அலைச்சலுடன் கிடைக்கும். எதிர்பார்த்த பணி முடிய கூடுதல் உழைப்பு தேவை. கவலை வேண்டாம். பிள்ளைகளுடைய விஷயத்தில் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் தேவையில்லாமல் பேச வேண்டாம். காதல் கசக்கும்.  மாணவர்கள் இன்று படிப்பின் மீது அக்கறை கொள்வார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 3                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |