இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்களின் உடலை அந்நாட்டு இராணுவம் வெள்ளைக்கொடி காட்டி மீட்டுச் சென்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா மீது பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்து , இந்திய நாட்டுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை பெற முயற்சித்த பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இந்திய நாட்டின் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் கடந்த 10_ஆம் தேதி ஹாஜிபூர் பகுதியில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயற்சித்தது.இதை சுத்திகரித்துக்கொண்ட இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல் நடத்தி இரண்டு பாகிஸ்தான் வீரர்களை கொன்றது. இந்நிலையில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் உடல் ஹாஜிபூர் பகுதியிலே கிடந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக்கொடி காட்டி இறந்து கிடந்தவர்கள் உடலை மீட்டு சென்றனர். எல்லை கொடி காட்டினால் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.