Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணி பெண்களே… உடனடியா தடுப்பூசி போட்டுக்கோங்க… கொரோனா தொற்று கருவில் உள்ள சிசுவை பாதிக்கும்…!!!

கர்ப்பிணி பெண்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா தொற்று கருவில் உள்ள குழந்தையை பாதிக்க வல்லது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தீவிர கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் கொரோனா பரவாமல் இருப்பதற்காக மக்கள் அனைவருக்கும் முழுவேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று கருவில் உள்ள சிசுவை பாதிக்க வல்லது என்பதால் கர்ப்பிணி பெண்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தொடர்ந்து அறிவுறுத்தி வரும் சென்னை மாநகராட்சி, கொரோனா தொற்றில் இருந்து கர்ப்பிணி பெண்களை தடுப்பூசி பாதுகாக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதுதொடர்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |