மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் போனஸ் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளை பலரும் சந்தித்துள்ளனர். பலர் தங்களது வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அந்தநிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 1500 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.12 லட்சம் ரூபாயை போனஸ் தொகையாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட் துணைத்தலைவர் பதவிக்கு கீழ் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும். கடந்த மார்ச் 31ம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும். முழுநேர ஊழியர்கள் மட்டுமல்லாமல் பகுதிநேர ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும். அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த தொகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மைக்ரோசாப் ஊழியர்கள் அனைவரும் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளது.