கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புகுந்த கருநாக பாம்பு ஒன்றை பிடித்த இளைஞர் அங்குள்ள ஏரியில் விட்டார்.
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் மூர்நாடு என்ற கிராமத்தில் 13 அடி நீளமுள்ள கரு நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அனைவரும் பதறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பாம்பு பிடிக்கும் வாலிபரான சூரிய கீர்த்தி என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த அவர் 13 அடி நீள கருநாகப் பாம்பை லாவகமாக கையில் பிடித்தார்.
பலமுறை அந்த பாம்பு அவரை தீண்ட முயற்சி செய்தது. அதுமட்டுமில்லாமல் அவரது கையிலிருந்து நழுவி சென்றது. இருப்பினும் விடாமல் பாம்பை பிடித்தார். அவர் கையில் பிடித்து வைத்திருந்த பாம்பு படமெடுத்து ஆடியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிலர் அதை போட்டோவாக எடுத்தனர். பின்னர் அந்த பாம்பை காவிரி ஆறு பிறப்பிடமான பாகமண்டலா பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள ஏரி அருகே காட்டில் விட்டார்.