Categories
தேசிய செய்திகள்

கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மக்கள்… விதிகளை மீறினால் 8 நாள் சிறை…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

மணாலியில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால் மத்திய அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மலை பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மணாலியில் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் புகைப்படம் வெளியாகி வருவதால், மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

இதையடுத்து அங்கு விதிகளை மீறும் சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது எட்டு நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காவல்துறையினர் மூன்று லட்சம் ரூபாயை அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

Categories

Tech |