தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் மக்களின் தேவைக்காக குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில்,பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பேருந்துகளில் கூட்டத்தை குறைக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பேருந்துகளில் மக்கள் கூட்டமாக கூடுவதால் மீண்டும் கொரோனாவால் அதிகரிக்கலாம் என்பதால் கூட்டத்தை குறைப்பதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.