தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று கருவில் உள்ள சிசுவை பாதிக்க வல்லது என்பதால் கர்ப்பிணி பெண்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தொடர்ந்து அறிவுறுத்தி வரும் சென்னை மாநகராட்சி, கொரோனா பாதிப்பிலிருந்து கர்ப்பிணிப் பெண்களை தடுப்பூசி பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளது.