இந்தி திணிப்பு எதிராக ட்வீட்_டரில் ஹாஷ்டாக் வைரலாகி வருவதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக பொறுப்பேற்றதை தொடர்ந்து ஒரே நாடு , ஒரே மதம் , ஒரே மொழி கொள்கையை பின்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மத்திய அரசின் தேர்வுகளில் இந்தி மொழி , புதிய கல்வி கொள்கையில் இந்தி மொழி என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
குறிப்பாக தமிழகம் கடுமையாக எதிர்த்து. மத்திய அரசு இந்திய மொழியை திணிக்கின்றது என்று தமிழக அரசியல் குற்றம் சாட்டின. குறிப்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்ப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றுகின்றது. அந்த வகையில் இந்தி நாளாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் இந்தி குறித்து பேசிய வீடியோ சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
भारत विभिन्न भाषाओं का देश है और हर भाषा का अपना महत्व है परन्तु पूरे देश की एक भाषा होना अत्यंत आवश्यक है जो विश्व में भारत की पहचान बने। आज देश को एकता की डोर में बाँधने का काम अगर कोई एक भाषा कर सकती है तो वो सर्वाधिक बोले जाने वाली हिंदी भाषा ही है। pic.twitter.com/hrk1ktpDCn
— Amit Shah (@AmitShah) September 14, 2019
மத்திய உள்துறை அமைச்சர் பேசிய அந்த கருத்தில் , இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்திருந்தார்.
https://twitter.com/arikisiva/status/1172744746852220928
இதை எதிர்க்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்தி நாளான இன்று #HindiDiwas என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாகியது. அமித்ஷாவின் இந்த கருத்தையடுத்து இந்தியை திணிக்கதே என்ற இரண்டு ஹாஷ்டாக் ட்ரெண்டாகியது. குறிப்பாக #StopHindiImposition , #StopHindiImperialism , ஆகிய இரண்டு ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாகியது.
தமிழகத்தை சார்ந்த பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டு தமிழுக்கு ஆதரவாக கருத்தை பதிவிட்ட்னர்.இதைத்தொடர்ந்து #HindiDiwas என்ற ட்ரெண்டிங்கை #StopHindiImposition என்ற ட்ரெண்டிங் முந்தி சென்றது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஒருவர் விஜய் நடித்த துப்பாக்கி பட சண்டை காட்சியில் விஜய் சொல்லும் அந்த பயம் இருக்கணும் டா என்ற ட்வீட்_வைரலாகி வருகின்றது.
https://twitter.com/TrollywoodOffl/status/1172732211289714688