சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். அப்போது தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் வருகையின்போது “ஒற்றை தலைமை ஓபிஎஸ்” என்று முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்களும் அவருக்காக முழக்கமிட இருவருக்குள்ளும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. ஆனால் அனைத்தும் சரிசெய்யப்பட்டு பின்னர் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் ஆக்கபூர்வமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எளியோர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.