Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பற்றாக்குறையா….? உதவி கரம் நீட்டும் நாடு…. அறிவிப்பு வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை…!!

கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களிடம் உள்ள 8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நாடுகளுக்கு முதன்மை அளிக்கப்படும் எனவும் பிற நாடுகளுக்கு ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்தோனேசியாவிற்கு 30 லட்சம் மாடர்னா தடுப்பூசிகளையும், நேபாளத்திற்கு 15 லட்சம் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளையும், பூடானிற்கு  5 லட்சம் மாடர்னா தடுப்பூசிகளையும் பகிர்ந்து அளிக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் 10 லட்சம் பைசர் தடுப்பூசிகளை  மலேசியாவிற்கு அளிப்பதாகவும் மற்றும் பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து , பப்புவா கினியா, லாவோஸ் ,கம்போடியா நாடுகளுக்கும்  தடுப்பூசிகளை அனுப்பி வைக்க உள்ளது.அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 92 நாடுகளுக்கும் கொடுத்து உதவுவதாகவும் அமெரிக்க அரசு கூறியுள்ளது. இதற்கு பிற நாடுகளில் இருந்து எந்த வித பிரதி பலன்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சீனாவும் தங்களின் நாட்டில் தயாரிக்கும் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

Categories

Tech |