நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அதனால் மணாலியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் புகைப்படங்கள் வெளியானதால் ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. இதனால் மணாலியில் விதிகளை மீறும் சுற்றுலாப்பயணிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 8 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என குலு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.