இந்தியாவா ? ”இந்தி”யாவா என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்த கருத்தில் , இது இந்தியாவா? அல்ல ”இந்தி”யாவா ? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என பேசியதை அமித்ஷா மறுபரிசீலனை செய்ய வேண்டும், நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க திமுக தயாராக இருக்கிறதுஎன்று ஸ்டாலின் தெரிவித்தார்.