முன்னணி நடிகை சமந்தா மும்பையில் வீடு வாங்க திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய நடிகைகள் பலர் மும்பையில் வீடு வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தாவும் மும்பையில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “தி ஃபேமிலி மேன் 2” திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்த சமந்தாவிற்கு ஹிந்தியில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
ஆகையால் அவர் மும்பையில் தங்கி நடிப்பதற்காக வீடு ஒன்று பார்ப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகிவரும் “சகுந்தலம்” எனும் புராண திரைப்படத்தில் சகுந்தலை ஆக நடித்து வருகிறார். இதைத் தவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.