ரசப்பொடி
தேவையான பொருட்கள் :
தனியா – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 2 கப்
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 4 டேபிள்ஸ்பூன்
மிளகு – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
விரலி மஞ்சள் – 1 சிறியது
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயைப் போட்டு பக்குவமாக வறுத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் மற்றொரு கடாயில் மற்ற பொருட்களை போட்டு இளந்தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் மிக்ஸியில் வறுத்த மிளகாயை தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும் . பின் மற்ற பொருள்களையும் தனியாக அரைத்து இரண்டு பொடிகளையும் நன்றாகக் கலந்து பாட்டிலில் போட்டு ரசம் வைக்கும் பொழுது தேவையான அளவு பொடியைப் போட்டு ரசம் வைத்தால், ரசத்தின் ருசியும், மணமும் நன்றாக இருக்கும்.