பாட்ஷா ஸ்டைலில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அங்கு ரஜினிகாந்த் அருகில் ஒரு நாய் ஒன்று இருந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதனைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் வில்லனிடம் பேசும்போது அவர் பக்கத்தில் நாய் இருப்பதை நினைவு கூர்ந்து தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்க்கும் போது அப்படியே பாட்ஷா பட காட்சியைப் போலவே இருக்கிறது என்று காமெண்ட் செய்து வருகின்றனர்.