Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இதை பண்ண வேண்டாம்” வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. அரியலூரில் பரபரப்பு….!!

கிணற்றில் தவறி விழுந்த முதியவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இறந்த நிலையில் மீட்டெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். இவருக்கு வடிவேல் என்ற தந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது மைத்துனரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வடிவேல் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து வடிவேலின் உறவினர்கள் நீண்ட நேரமாக அவரை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.  அதன்பின் வடிவேலின் மைத்துனர் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வடிவேலின் செருப்பு மற்றும் வெற்றிலை  பொட்டலங்கள் கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வடிவேலின் உறவினர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் வடிவேலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் சுமார் 12 மணி நேரம் போராடியும் தீயணைப்பு படை வீரர்களால் வடிவேலின் உடலை விரைவாக மீட்க முடியவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு இன்னும் அதிகமான பயிற்சி மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் உடலை மீட்டு எடுக்கும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் வடிவேலு உடலை இறந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனைத்தொடர்ந்து வடிவேலின் உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்கு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வடிவேலின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அப்போது வடிவேலின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும்  கிணற்றில் தவறி விழுந்து வடிவேலு உயிரிழந்ததால் வழக்குப் பதிவு செய்யாமல்  உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் எராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் வடிவேலின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |