இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல் நகர மேயரை அமெரிக்க அதிபர் நியமனம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் லாஸ் ஏஞ்சல் நகரத்தின் மேயர் ஏரிக் கார்செட்டி ஆவார். இவர் அமெரிக்க தேர்தலின் போது அதிபர் ஜோ பைடனின் இணைத் தலைவராக பிரச்சாரத்தில் பணியாற்றியவர். இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக ஏரிக் கார் செட்டியை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்.
இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து எரிக் கார்செட்டி டிசம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக இருந்த போது நிர்வாகத்தில் குறிப்பிடப்படாத நிலையை நிராகரித்ததாக கூறினார்.