Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த யோகி பாபு… வெளியான புகைப்படம்…!!!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்பவருடன் சிம்பிளான முறையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர் தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரபலங்களை அழைத்து நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கொரோனாவின் காரணமாக அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறாமல் நின்றுவிட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் யோகிபாபு, மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் யோகிபாபு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |