சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுடலைமுத்து பூல்பாண்டி,முருகன் ஆகியோரை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து தப்பி ஓட முயன்ற அந்த வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.