விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
HRITHIK – SAIF IN 'VIKRAM VEDHA' REMAKE… #HrithikRoshan and #SaifAliKhan will star in the #Hindi remake of #Tamil film #VikramVedha… Pushkar-Gayathri – the director duo of the original film – will direct the #Hindi version too… 30 Sept 2022 release. pic.twitter.com/2nyEhro4rG
— taran adarsh (@taran_adarsh) July 10, 2021
இதில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடிக்கின்றனர். மேலும் தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகின்றனர். இந்நிலையில் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.