Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதுக்காக இப்படி பண்ணுனாங்க… திடீரென நடந்த கோர சம்பவம்… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

இடப்பிரச்சினை காரணமாக கூலித்தொழிலாளியை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தகொல்லைமேடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான பிரபு மற்றும் சின்னராசு என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களின் இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரபு மற்றும் சின்னராசுவை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிய சின்னராசுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இடப்பிரச்சனை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக் குற்றவாளியை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |