Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தங்கச்சி சாப்பாடு செய்” அண்ணன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாவீரன் என்ற மகன் இருந்துள்ளார். இவரது தாய் இறந்துவிட்டதால் அறிவழகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மாவீரன் வேலைக்கு சென்று தனது அண்ணன் மற்றும் தங்கையை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மாவீரன் வீட்டில் சாப்பாடு செய்ய சொல்லி தனது தங்கையிடம் கூறிய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த மாவீரன் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் அருகில் உள்ளவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாவீரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |