கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது தூக்கில் தொங்கி படி பெண்ணும், தரையில் ஆணும் சடலமாக கிடந்துள்ளனர். இவர்களுக்கு அருகில் செல்போனும், ஒரு கடிதமும் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் ராமன் என்பவரது மனைவியான கண்ணம்மாள் என்பதும், இறந்து கிடந்த ஆண் அப்துல் ஆசாத் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் கண்ணம்மாள் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் கடந்த மூன்று வருடமாக கண்ணம்மாளுக்கும், ஆசாத்துக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனால் ஆசாத்தின் தந்தையான அப்துல்லா என்பவர் கண்ணம்மாளின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொள்வதாக கண்ணம்மாள் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும் தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரை அப்துல்லாவின் குடும்பத்தினர் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கண்ணம்மாள் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.