Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளை திறக்க கூடாது…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |