ஆடுகளை திருடிச் சென்ற 3 சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் அரசு தனியார் நிறுவன ஊழியரான எழில் என்பவர் தனது வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வாழப்பாடி பகுதியில் கனமழை பெய்ததால் தனது ஆடுகளை வீட்டின் முன்புறம் கட்டி வைத்துள்ளார். இதனையடுத்து மழை நின்றவுடன் எழில் திரும்பி வந்து பார்த்தபோது தனது இரண்டு ஆடுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்பு எழிலும் அவரது குடும்பத்தினரும் ஆடுகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அப்போது எழில் சின்னாண்டிகாடு பகுதியில் பார்த்தபோது சேற்றில் சிக்கிய நிலையில் சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் தனது இரண்டு ஆடுகள் இருப்பதை எழில் பார்த்துள்ளார். அதன் பின்னர் இதுகுறித்து எழில் வாழப்பாடி காவல்துறையினருக்கு தகவல் அறிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் திருப்பூர் பகுதியில் வசிக்கும் ராபின், சூர்யா மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஆடுகளை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் காரில் ஆடுகளை திருடிச் சென்ற 4 பேரையும் கைது செய்ததோடு, 2 ஆடுகளையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். அதன்பின் அந்த சிறுவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் 16 வயதுடைய ஒரு சிறுவனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் காவல்துறையினர் 3 பேரையும்கைது செய்து சிறையில் அடைத்தனர்,