Categories
உலக செய்திகள்

ஜப்பானில் ஆசிரியை சடலமாக மீட்பு.. மர்மமாக உயிரிழப்பு..!!

ஜப்பானில் மாயமான பிரிட்டன் பெண் ஆசிரியையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நாட்டிங்ஹாம் பகுதியில் வசித்த ஆலிஸ் ஹோட்கின்சன் என்ற 28 வயது பெண் டோக்கியோவில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். எனவே Kanagawa என்ற பகுதியில் தங்கி, பணிக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களாக அவர் பணிக்கு வராததால் ஜூலை 1ஆம் தேதி என்று அவரின் மேலாளரால் மாயமானார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்பின்பு, காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே கடந்த ஒரு வாரமாக அவரை காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலிஸின் குடும்பத்தார், அவர் மிகவும் புத்திசாலி, நம்பிக்கை, அக்கறை, சாகசம் மற்றும் நகைச்சுவை உணர்வு உடையவர் என்று கூறியுள்ளனர். மேலும் பிரிட்டன் வெளியுறவு அலுவலகமானது, இந்த சமயத்தில் அவரின் குடும்பத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், ஜப்பானின்  உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |