தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கிடையேயான பேருந்து சேவைக்கு அனுமதி இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்கவும் அனுமதியளித்துள்ளது.