பிரிட்டனில் கொரோனா தொற்று சில வாரங்களில் குறைந்து விடும் என்று நாட்டின் அறிவியல் ஆலோசகர்கள் கூறியுள்ளார்கள்.
இங்கிலாந்தின் கால்பந்து போட்டியின் வெற்றிக்குபின் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று சில ஆவணங்களில் நல்ல தகவல் கிடைத்திருக்கிறது. பருவநிலை மாற்றம், தடுப்பூசிகள், இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, போன்றவற்றினால் கொரோனா சமநிலையை அடையும்.
அதன் பின்பு சில வாரங்களில் பரவல் குறையும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். எனினும், இது எப்போது நடக்கும் என்று சரியாக கூற முடியாது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா பரவல் குறைந்துவிடும் என்று நம்புவதாக அரசு தெரிவித்துள்ளது.