நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கினால் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் புதுச்சேரியில் பாதிப்பு குறைந்துள்ளதால் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும். எனவே ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகள் திறப்பு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதால் சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.