Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உரிய நடவடிக்கை…. அமைச்சர் மூர்த்தி உறுதி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அதனால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் ஏரி மற்றும் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

தமிழகத்தில் ஜூலை 12 வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் மழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழையில் நனையும் நெல் மூட்டைகள் குறித்து தகவல் அளித்தால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார். தகவல் கிடைக்கும் பட்சத்தில் விரைவில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |