Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கப்பட்ட பணி…. கண்டெடுக்கப்பட்ட சுவர்கள்…. தொல்லியல் அதிகாரிகளின் ஆய்வு….!!

சோழர் காலத்தை சேர்ந்த வடிகால் அமைப்பு போன்ற சுவர்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வந்தன. அந்த ஆய்வில் பானை ஓடுகள்,சீன கலைநயமிக்க மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மேலும் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்று சுவரானது ஆராய்ச்சியில் தென்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து கொரோனா தாக்கம் தற்போது குறைந்துள்ளதால் மீண்டும் மாளிகைமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின.

இதில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் இரண்டாவது பாகமும் கண்டெடுக்கப்பட்டது. மேலும் வடிகள் அமைப்பு போன்ற சுற்று சுவர்களும் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டவை அனைத்தும் சோழர்களின் வரலாற்றைக் உறுதி செய்வதாக கூறியுள்ளனர். மேலும் சோழர்களின் வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷங்களும், இன்னும் அதிகமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |