பிரிட்டனில் ஒரு தம்பதி தனிமைப்படுத்துதலிலிருந்து தப்புவதற்கு 6 ஆயிரம் பவுண்டுகள் செலவு செய்து ஏழு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த Ivan மற்றும் Jayne Hutchings என்ற தம்பதியர் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். அங்கு ஹோட்டலில் தனிமைப்படுத்துதலிலிருந்து தப்புவதற்காக சுமார் 7 நாடுகளுக்கு பயணித்து அதன்பின்பு நாடு சென்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்ட Frankfurt வழியே இவர்கள் பிரிட்டன் திரும்பியுள்ளனர். அங்கு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் கோபமடைந்த Ivan தனிமைப்படுத்துதலை எதிர்த்தார். மேலும் என் முன்னோர்கள் சுதந்திரத்திற்காக போராடினார்கள் என்று கூறினார். இது மட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நன்றாக செயல்பட்டு வருகிறது. எனினும் ஹோட்டல் தனிமைப்படுத்துதல் வெறுப்பாக இருக்கிறது என்று கூறினார்.
அதாவது, இந்த தம்பதி தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த வருடம் டிசம்பர் 8ம் திகதி அன்று பிரிட்டன் திரும்ப முடிவெடுத்துள்ளனர். ஆனால் டிசம்பரில் பிரிட்டனின் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதனால், அவர்கள் தென்னாப்ரிக்காவில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், எகிப்து மற்றும் துருக்கியின் வழியே குரோஷியா சென்றுவிட்டனர்.
அப்படியே Frankfurt சென்று, அதன் பின்பு பர்மிங்காம் சென்றனர். இதற்கிடையில் வாகனத்தில் குரோஷியா செல்வதற்கு முன்பு, Montenegro பகுதியில் தங்கியிருந்த நேரத்தில் தான் அவர்களுக்கு கொரோனா பாதித்தது. அறிகுறிகள் லேசாக இருந்ததால், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.