Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த கனமழை சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ரா நல்லூர், மரக்கடை, கோரையாறு, திருராமேஸ்வரம், வேளுக்குடி, வடபாதிமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இவ்வாறு பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி மழைநீர் சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |