தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகள் மீதான புகார்களை குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்க எதிராக புகார் பதிவேடு வைக்க வேண்டும். ஆன்லைனில் புகார்களை தெரிவிக்க சிரமங்கள் உள்ளதாக வந்த கோரிக்கைகளை அடுத்து பொதுமக்கள் புகார்களை எழுத்து மூலம் தெரிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உடனடியாக செயல்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.