Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது தப்புனு தெரியாதா…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

ஓட்டலில் பயன்படுத்தி வந்த தரமற்ற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு சாலை, காந்தி சாலை போன்ற பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் தரம் இன்றி உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தவேல், ராஜேஷ் போன்றோர் ஆற்காடு சாலையில் உள்ள ஓட்டல், டீக்கடைகள், ஜூஸ், ஐஸ்கிரீம் மற்றும் பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரம் இன்றி இருந்த 4 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். மேலும் சுகாதாரமற்ற உணவு வைத்திருந்ததாக 2 ஓட்டல் உரிமையாளருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதனையடுத்து சி.எம்.சி மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் பழைய மீன் மற்றும் கோழி இறைச்சிகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் 10 கிலோ இறைச்சி, தரமற்ற உணவு மசாலா வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர். அங்கிருந்த டீ கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தியதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து 2 கிலோ கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |