ஊருக்குள் சிறுத்தை புலிகள் நடமாடுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் பதிவாகி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 3 சிறுத்தை புலிகள் நடமாடுவது பதிவாகியிருக்கிறது.
இவ்வாறு சிறுத்தை புலிகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அச்சத்தில் உள்ளனர். எனவே சிறுத்தை புலிகளை விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.