கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் மனைவியான சிவகாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி தனது இரண்டு குழந்தைகளுடன் பொன்னுச்சாமியுடன் சென்றுவிட்டார். இதனையடுத்து செல்லாண்டி கவுண்டன்புதூர் பகுதியில் வேலை பார்த்துக்கொண்டே பொன்னுசாமி சிவகாமியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் யூடியூபில் மாந்திரீகம், ஜோசியம் போன்றவற்றை பார்த்து மன நலம் பாதிக்கப்பட்டிருந்த பொன்னுசாமி தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனை அடுத்து இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வருவதற்குள் உடல் கருகி பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.