Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்….. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் அதிகரிக்கும் தென்மேற்கு பருவமழை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |