நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. மூன்றாம் அலை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து நடிகர் சிபி சத்யராஜ் தனது முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டார். கொரோனாவுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.